யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் யாழ்.மாநகர முதல்வர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
யாழ்.வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையின் பரிசளிப்பு விழாவும் நிறுவுனர் நினைவு நாளும் நேற்றைய தினம் (29) காலை வெகுசிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் திருமதி.பொன்னம்பலம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.மாநகர முதல்வர் திருமதி.யோகேஸ்வரி பற்குணராஜா அவர்களும் திரு.கு.பற்குணராஜா அவர்களும் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டனர். விழாவின் ஆசியுரையை வணக்கத்திற்குரிய தேவதாசன் அடிகளார் நிகழ்த்தியதுடன் நிறுவுனர் நினைவுரை திருமதி.ரதிராணி யோகேந்திரராஜாவும் பரிசளிப்பு தின உரையை பிரதம விருந்தினர் திருமதி.யோகேஸ்வரி பற்குணராசா அவர்களும் நிகழ்த்தினார்கள்.
பரிசளிப்பு விழாவின் முக்கிய நிகழ்வாக பாடசாலை மட்டத்தில் பரிசு பெற்ற மாணவிகளுக்கும் மாவட்ட மட்டத்தில் பரிசு பெற்ற மாணவிகளுக்கும் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவிகளுக்கு பரிசில்களையும் சான்றிதழ்களையும் பிரதம அதிதிகள் வழங்கிக் கௌரவித்ததும் குறிப்பிடத்தக்கது.