+


முன்னாள் பெண் புலி உறுப்பினர்களுக்கு முன்பள்ளி டிப்ளோமா நெறி!

 

வவுனியா புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள முன்னாள் பெண் புலி உறுப்பினர்களுக்கு என முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறி அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகப் புனர்வாழ்வு நிலையத்தின் ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுசந்த ரணசிங்க தெரிவித்தார்.

வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு நிலையங்களில் முன்னாள் பெண் புலி உறுப்பினர்கள் 120 பேர் தங்கியுள்ளனர். இவர்களுக்காக இக்கற்கை நெறி நடத்தப்படவுள்ளது. வவுனியா பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் 60 பெண்களும் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் 60 பெண்களும் தங்கியுள்ளனர். இவர்களுக்கு இக்கற்கை நெறி வெவ்வேறாக நடாத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

© 2008 www.velichcham.com | e-Mail: info@velichcham.com | Copyright  www.velichcham.com. All rights reserved.