வடகிழக்கு அபிவிருத்திக்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் 840 கோடி ரூபா ஒதுக்கீடு..!
நாட்டில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்குப் பகுதிகளின் அபிவிருத்திக்காக ஐரோப்பிய ஒன்றியம் 840 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.
நாட்டின் வடக்கு கிழக்குப் பகுதிக்கு இடைக்கால உதவித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக இந்த உதவி வழங்கப்படுவதாக இலங்கை மற்றும் மாலைதீவிற்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. சமூகத்தில் நலிவடைந்த நிலையிலுள்ளோரின் தேவைகளை கவனத்தில் கொண்டு குறிப்பாக 2009ல் முடிவிற்கு வந்த மோதலில் பாதிக்கப்பட்டோரின் தேவைகளை மையப்படுத்தி அவர்களுக்கு ஆதரவாக அதாவது சமாதானம் ஸ்திரத்தன்மை நல்லிணக்கம் என்பனவற்றை நோக்கி முன்நகர்வை மேற்கொள்வதற்காக இந்த ஆதரவு வழங்கப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.