500 பேர் மீள்குடியேற்றத்துக்காக இன்று அழைத்துச் செல்லப்படவுள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
வவுனியா மெனிக்பாம் நிவாரணக் கிராமத்தில் இன்றைய தினத்தில் சுமார் 48000 பேர் அளவில் மட்டுமே தங்கிர்ளதாகவும் இவர்களில் தினமும் தலா 500 பேர் வரை மீள்குடியேற்றத்திற்காக அனுப்பப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். அத்துடன் வவுனியா மாவட்டத்தில் மீளக்குடியமர்த்துவதற்கு ஏதுவாக பொதுமக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள படையினர் விலகிச் செல்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதுடன் ஓமந்தை 561 படையணி முகாம் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. மாற்றுக் காணிகள் வழங்கப்படுவதை தொடர்ந்து படையினர் பொதுமக்களிடம் அவர்களது காணியை ஒப்படைத்துச் செல்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
இதேவேளை நாளையும் நாளை மறுதினமும் தொடர்ந்து மீளக்குடியேற்றத்துக்காக மக்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.