+

அதிக விலையில் அரிசி விற்போரைக் கண்டுபிடிக்க நாளை முதல் தேடுதல் - அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு

 

அரசாங்கம் அறிவித்துள்ள கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்க அதிக விலைக்கு அரிசியை விற்கும் வர்த்தகர்களைத் தேடிக்கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்தும் விசேட நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பண்டிகைக் காலங்களில் பொது மக்களுக்கு தாராளமாக அரிசி கிடைக்கக் கூடிய சகல ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்துள்ளது. இக்கால கட்டத்தில் எவ்வித விலை அதிகரிப்பும் ஏற்பட வழியில்லை.

அரிசியைப் பதுக்குவோர் மற்றும் அதிக விலையில் விற்போர் ஆகியோரைக் கண்டு பிடிக்க நாளை முதல் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் எவ்வித அரசியல் பாகுபாடுகளும் காட்டப்;படமாட்டாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

© 2008 www.velichcham.com | e-Mail: info@velichcham.com | Copyright  www.velichcham.com. All rights reserved.