+

வடக்கில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலைகள்!

 

வடக்கில் பாரிய அளவிலான 10 தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலைகளை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பெரும் தோட்டக் கைத்தொழில் அமைச்சர் டி.எம்.ஜயரத்னவின் ஆலோசனைக்கேற்ப தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் 30 மில்லியன் ரூபா செலவில் முல்லைத்தீவு கிளிநொச்சி அலம்பில் மற்றும் பளை ஆகிய பிரதேசங்களில் இந்தத் 10 தொழிற்சாலைகளும் அமைக்கப்படவுள்ளன.

2011 ஆம் ஆண்டு குறிப்பிட்ட தொழிற்சாலைகளின் உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதுடன் அதன் மூலம் நாளொன்றுக்கு 20 மெட்றிக் தொன் தேங்காய் எண்ணெய்யை உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

© 2008 www.velichcham.com | e-Mail: info@velichcham.com | Copyright  www.velichcham.com. All rights reserved.