+

 

 

யாழ் வலம் 05.06.2010

புனை மரங்கள் அழிப்பு!

தெல்லிப்பளை ஜே 238 கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கட்டுவான் கோவில் பகுதியில் சட்டவிரோதமான முறையில் பனை மரங்கள் வெட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

--------------------------

வலி கிழக்கில் 25 ஆலயங்கள் பாதிப்பு!

கடந்தகால யுத்த அனர்த்தம் காரணமாக வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில் 25 ஆலயங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது.

--------------------------

காரைநகரில் தங்கச் சங்கிலிகள் அபகரிப்பு

காரைநகர்ப் பகுதியில் ஆலய திருவிழா ஒன்றின் போது நான்கு பெண்களது தங்கச் சங்கிலிகள் திருடர்களால் அபகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

மருதடி, வீரகத்தி விநாயகது ஆலய தேர்த்திருவிழா கடந்த 3ம் திகதி இடம்பெற்ற போதே சுமார் 11 பவுண் எடை கொண்ட இந்தத் தங்கச் சங்கிலிகள் அபகரிக்கப்பட்டுள்ளன.

--------------------------

வட மாகாண விளையாட்டு விழா யாழ்ப்பாணத்தில்

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு விழா இம்மாதம் இறுதியில யாழ்ப்பாணத்தில் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளதாகத் தெரிய வருகிறது.

--------------------------

குற்றம் புரிவோருக்கு எதிhக புகார் பெட்டிகள்

யாழ் குடாநாட்டில் அண்மைக் காலமாக பாடசாலை மாணவர்கள் மீது பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதால் அதனைத் தடுக்கும் முகமாக பாடசாலைகள் தோறும் புகார் பெட்டிகளை அமைத்து அவற்றில் மாணவிகள் தங்களது பிரச்சினைகளை எழுத்து மூலம் எழுதிப் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெசின் பத்மதேவ தெரிவித்துள்ளார்.

--------------------------

யாழ் கோட்டைப் பகுதி புனரமைப்பு

யாழ் கோட்டைப் பகுதி புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக நெதர்லாந்து அரசு 104 மில்லியன் ரூபா நிதியை வழங்கியுள்ளது.

இதன் பிரகாரம் புனரமைப்புப் பணிகள் இவ்வருட இறுதியில் ஆரம்பமாகி மூன்று வருடங்களில் பூர்த்தி செய்யப்படவுள்ளதாகத் தெரிய வருகிறது.

--------------------------

நயினாதீவு இறங்குதுறை புனரமைப்பு

நயினாதீவு நாகவிகாரையின் இறங்குதுறையை 23 இலட்சம் ரூபா செலவில் புனரமைப்புச் செய்வதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

--------------------------

படையினர் வெளியேற்றம்

கொடிகாமம், புகையிரத நிலையப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் முகாம்களை விட்டு முற்றாக வெளியேறியுள்ளனர்.

 

© 2008 www.velichcham.com | e-Mail: info@velichcham.com | Copyright  www.velichcham.com. All rights reserved.