+


யாழ். - வன்னிக்கு 6376 மில்லியன் ரூபா செலவில் நிரந்தர மின்சாரக் கட்டமைப்பு!

 

கிளிநொச்சி சுன்னாகம் வவுனியாப் பிரதேசங்களை இலக்காகக் கொண்ட மின்சாரத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கென 6376 மில்லியன் ரூபா நிதி செலவிடப்படவுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க பாராளுமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார்.

கிளிநொச்சி சுன்னாகம் வரையிலான முதலாவது மின் இணைப்புத் திட்டத்துக்கு 3276 ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் இரண்டாவது திட்டமான வவுனியா - கிளிநொச்சி வரையிலான திட்டத்துக்கு 3100 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.

 

© 2008 www.velichcham.com | e-Mail: info@velichcham.com | Copyright  www.velichcham.com. All rights reserved.