+


யாழ்.பல்கலைக்கழத்திற்கு 684 மாணவர்கள் அனுமதி!

 

யாழ்.பல்கலைக்கழத்திற்கு 2009 - 2010ம் கல்வியாண்டிற்கு இம்முறை 684 மாணவர்கள் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்திற்கு புதிதாக அனுமதி பெறும் மாணவர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியலின்படி சங்கீதம் நடனம் சித்திரமும் வடிவமைப்பும் ஆகிய கற்கைநெறிகளுக்கான பதிவுகள் எதிர்வரும் 9ம் திகதி இடம்பெறவுள்ளது. பௌதீக விஞ்ஞானம் உயிரியல் விஞ்ஞானம் சட்டம் விவசாயம் சித்த மருத்துவம் ஆகிய கற்கைநெறிகளுக்கான பதிவுகள் எதிர்வரும் 12ம் திகதியும் மருத்துவக் கற்கைநெறிகளுக்கான பதிவுகள் எதிர்வரும் 13ம் திகதியும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

© 2008 www.velichcham.com | e-Mail: info@velichcham.com | Copyright  www.velichcham.com. All rights reserved.